BYTES - Development Never Ends

Sunday, January 07, 2007

அறியாமை

அறியாமையுடன்
தொடங்கும் காரியம்
தோண்டி பார்க்கும்
ஆர்வம்
வெற்றி நிச்சயம்

எடிசனுக்கு
என்னத்தை கண்டுபிடிக்கிறோம்
என்று தெரியாது
பில் கேட்ஸ்க்கு
கம்பெணி என்னவாகும் -
தொடங்கும் பொழுது தெரியாது

எங்கே தொலைந்தாய்
நீ
என்னை தவிக்கவிட்டு
எங்கே மறைந்தாய்

ஒரு பெண்
அவள் வடிவு
கல்லூரியில் பார்த்த
அதே கண்கள்
இன்றும் பார்க்கின்றன
ஆனால்
அவளை நெருங்க நெருங்க
அவளை சுற்றி
எல்லாம் தெரிகிறது
அன்றுஅவள் மட்டும் தெரிந்தாலே
அறியாமையே
எங்கே போனாய் நீ

வாழ்க்கைஓடுகிறது
எதை நோக்கி ஓடுகிறது
தெரியவில்லை
காசு பணம் சேர்க்கவா
நான் பத்து காசு சேர்த்தால்
அடுத்தவன்
நூறு காசு சேர்க்கிறானே
சாதி சனத்தை
நல்ல நிலைக்கு கொண்டு வரவா....
ஆம்அங்கே கொஞ்சம்
அறியாமை இருக்கிறது

கூலிக்கு மாரடிக்கும்
பொழப்பில் அறியாமையா?
இரண்டு மாதம்
சம்பளம் இல்லையென்றால்
வேறிடம்போய் விடுவேன்.

மனைவியிடமா....
அவளை
தொடும் பொழுதெல்லாம்
கொண்டு வந்தகாசெ ஞாபகம் வருகிறது.
அவள்
என் தோழியானாள்.
ஆராயஆரம்பித்துள்ளேன்.
ஆம்
அவளிடம் கொஞ்சம்
அறியாமை இருக்கிறது.

பிள்ளையிடமா
என் உயிர்
என் பாதி அறியாமை
அங்கேதான்.

வேறு
எங்கே இருக்கிறது
தேடுகிறேன்
ஒவ்வொரு
பெண்ணின் காதலிலும்,
ஒவ்வொரு
ஆடவனின் நட்பிலும்,
என்
மனைவியின் ஸ்பரிஸத்திலும்,
ஒவ்வொரு
மூலையிலும் தேடுகிறேன்.

ஆண்டவனே
அறியாமையை
இழந்து, அசிங்கமாய்
ஆகிவிடாமல்
என்னை பார்த்துக்கொள்.

ஏ. ஆன்ந்த்.